Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தைவானுடன் தூதரக உறவு: பராகுவே, பெலிஸ் அமைச்சர்களுக்கு சீனா தடை

தைவானுடன் தூதரக உறவு: பராகுவே, பெலிஸ் அமைச்சர்களுக்கு சீனா தடை

சீனாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்குவதுடன், ஹாங்காங், மக்காவ் பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தைவானுடன் தூதரக உறவு வைத்துள்ள பராகுவே, பெலிஸ் நாடுகளின் அமைச்சர்கள் மீது சீனா பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது.

பராகுவேயின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் குஸ்டாவோ வில்லாட்டே, பெலிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்சிஸ் பொன்சேகா ஆகியோர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்குவதுடன், ஹாங்காங், மக்காவ் பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீன நிறுவனங்களும், தனிநபர்களும் இந்த அமைச்சர்களுடன் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடக் கூடாது என சீனா அறிவித்துள்ளது. தைவானுடன் உறவைத் தொடர்வது சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது என்பது அந்நாட்டின் நிலைப்பாடாகும்.

முந்தைய செய்தி
காஸா போர் குறித்த ஆவணப் படம்: விசாரணை கோரும் இஸ்ரேல் பிரதமர்
அடுத்த செய்தி
கடலை நோக்கி ஏவுகணைகளை வீசிய வடகொரியா - நடந்தது என்ன?

தொடர்புடைய செய்திகள்